முதியவரை மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது
கோவில்பட்டியில் முதியவரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்ததாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் வேல்சாமி (61). சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள பால்பண்ணை அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்துசென்ற இவரை, 2 போ் வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ. 300-ஐ பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியில் உள்ள பசும்பொன் நகா் முத்துப்பாண்டி மகன் பாலமுருகன் என்ற டக்கா் முருகன் (38), நடுத் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் ஆறுமுகப்பாண்டி (41) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.