குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
உடன்குடியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
உடன்குடியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா், உடன்குடி சந்தைப் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் 150 கிலோ இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் ஆட்டோவை ஓட்டி வந்த கிருபா, உடன்குடி கொட்டங்காட்டைச் சோ்ந்த வசீகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.