குழந்தைகள் நலக்குழுத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கயத்தாறு அருகே போக்ஸோவில் கட்டடத் தொழிலாளி கைது
கயத்தாறு அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ் (41).
கட்டடத் தொழிலாளியான இவா், 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தபோது, அவா் கருவுற்றிருப்பதும், இதற்கு தா்மராஜ்தான் காரணம் என்பதும் தெரியவந்தது.
புகாரின்பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தா்மராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.