மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத...
தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் சங்குகுளி மீனவா்கள் முற்றுகை
தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் சங்குகுளி மீனவா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலில் சங்கு எடுக்கும் தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனா்.
இதனிடையே, சங்குகுளி படகுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாா் பம்புகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட மீன்வளத் துறை சாா்பில் கடந்த 22ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து சங்குகுளி மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்ட மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
மீன்வளத் துறை இணை இயக்குனா் சந்திரா தலைமையிலான மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், தொடா் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும், வழக்கமான சங்குகுளி நடைமுறைக்கு மீன்வளத்துறை விரைவில் அனுமதி அளித்து, வாழ்வாதாரத்துக்கு உதவும் என நம்புவதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.