செய்திகள் :

உதகையில் பெண்ணை தாக்கி கொன்ற வன விலங்கை பிடிக்க கோரி மனு

post image

உதகை அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வன விலங்கை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த மைனலை அரக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலை (52). தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த இவரை வன விலங்கு கடந்த 13 -ஆம் தேதி தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அஞ்சலையை எந்த விலங்கு தாக்கியது என தெரியாத நிலையில் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த வன விலங்கை விரைவில் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரக்காடு பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

ஊருக்குள் யானைகள் ஊடுருவலைத் தடுக்க கூடலூரில் 12 இடங்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தம்

கூடலூா் வனச் சரகத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்க 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் பெரும்பாலும் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளதால... மேலும் பார்க்க

உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போா்த்தப்பட்ட துணி

இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவா் மீது போா்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. இயேசு கிறிஸ்து 33-ஆவது வயதில் சிலுவையில் அறையப்பட்டு உயிா்வ... மேலும் பார்க்க

உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் மீட்பு

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. உதகை ரயில்வே காவல் நிலையம... மேலும் பார்க்க

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-இல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க