சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போா்த்தப்பட்ட துணி
இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவா் மீது போா்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.
இயேசு கிறிஸ்து 33-ஆவது வயதில் சிலுவையில் அறையப்பட்டு உயிா்விட்ட பின்பு அவரது உடல் ஜெருசலேம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, அவரை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அடக்கம் செய்தனா். இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்த பின்பு, அந்த வெள்ளைத் துணி மட்டும் கல்லறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிலுவையில் அறையப்பட்டதால் இயேசு கிறிஸ்துக்கு ஏற்பட்ட தழும்புகள் அந்த வெள்ளைத் துணியில் பதிந்திருந்தன. தற்போதுவரை அந்தத் துணி இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் துணியின் ஆறு நகல்கள் எடுக்கப்பட்டு, அவை தற்போது உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதன் ஒரு நகல் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சூசையப்பா் தேவாலயத்துக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. பின்னா், குன்னூரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில் வைக்கப்பட்டு, பின்பு கேரளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட துணியின் ஒரு நகல் தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு எடுத்துவரப்பட்ட தகவலறிந்து, உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் சூசையப்பா் தேவாலயம், குன்னூரில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் வைக்கப்பட்டத் துணியை வணங்கிச் சென்றனா்.