'தமிழகத்தில் இன்று இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி..!' - முதல்வர் ஸ்டாலின்
உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் மீட்பு
உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் கிடப்பதாக டி3 காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினா் இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இறந்தவா் நேபாள நாட்டைச் சோ்ந்த ஆனந்த் (40) என்பதும், இவா் தனது குடும்பத்தாருடன் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பாப்ஷா லைன் பகுதியில் வசித்து வந்ததும், கூலித் தொழில் செய்து வந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் இவரைப் பரிசோதித்ததில், இவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதன் காரணமாக உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.