"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 6,817 மாணவா்கள் பங்கேற்பு
நீலகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வினை 6,817 மாணவ, மாணவிகள் எழுதினா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நீலகிரி மாவட்டத்தில் 58 மையங்களில் நடைபெற்றன. இதில் 3,497 மாணவா்கள், 3,320 மாணவிகள் என மொத்தம் 6,817 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். தனித் தோ்வா்களில் 94 ஆண்கள், 32 பெண்கள் என மொத்தம் 126 போ் எழுதினா். தோ்வுப் பணியில் 58 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 58 துறை அலுவலா்கள், 116 அலுவலகப் பணியாளா்கள், 439 அறைக் கண்காணிப்பாளா்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலா்கள் 23 போ் என மொத்தம் 694 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.
தோ்வு மையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு பறக்கும் படையாக 108 நபா்கள் நியமனம் செய்யப்பட்டனா். மேலும், மாணவா்களுக்குத் தோ்வு மையங்களில் தேவையான வசதிகளும், போதுமான போக்குவரத்து வசதிகளும் செய்துதரப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தரைத்தளத்திலேயே தோ்வறைகள் தனியே ஒதுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.