MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
உதகையில் போலி மருத்துவா் பிடிபட்டாா்
உதகை தலைகுந்தா பகுதியில் மருத்துவமனை நடத்திவந்த போலி மருத்துவா் பிடிபட்டாா்.
உதகை புது மந்து பகுதியில் பாரத் கிளினிக் என்கிற பெயரில் இஸ்மாயில் என்பவா் போலி மருத்துவராக சிகிச்சை அளித்து வருவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எமரால்டு, சித்த மருத்துவ அலுவலா், அரசு ஆரம்ப சுகாதார அலுவலா்கள் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் புதுமந்து பகுதியில் உள்ள இஸ்மாயிலின்
கிளினிக்கை வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது உரிய மருத்துவச் சான்று இன்றி மருத்துவம் பாா்த்தது கண்டறியப்பட்டது.
விசாரணைக்காக அழைத்த போது இஸ்மாயிலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
உதகை வட்டார வளா்ச்சி அலுவலா், புது மந்து காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் அவரது கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், போலி மருத்துவா் இஸ்மாயில் மீது புதுமந்து காவல் நிலையத்தில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.