சென்னை மேம்பாலத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு
உலகக் கோப்பை தகுதிச் சுற்று: மெஸ்ஸி, வினிசியஸ் ஜூனியருக்கு அதிர்ச்சி..!
2026ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி பராகுவே அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் 2-1 என பராகுவே அணி வென்றது. இதுவரை நடந்த போட்டிகளில் ஆர்ஜென்டினா 60 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் தோற்றாலும் தென் அமெரிக்கா பிரிவில் ஆர்ஜென்டினா புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு ஆட்டத்தில் பிரேசிலும் வெனிசுலா அணியும் மோதின. இந்தப் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. புள்ளிப் பட்டியலில் பிரேசில் 3ஆவது இடத்தில் இருக்கிறது. கொலம்பியா 2ஆம் இடத்தில் இருக்கிறது.
பேலன் தோர் விருது வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்காததால் விழாவை ரியல் மாட்ரிட் அணி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு கோல் கூட அடிக்காதது குறிப்பிட்டத்தக்கது.
லா லீகா தொடரில் ஹாட்ரிக் கோல்கள் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.