செய்திகள் :

உஷார்: UPI, PhonePe, PM Kisan Yojna செயலி மூலம் நடைபெறும் மோசடி - எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!

post image

பணப் பரிவர்த்தனை என்பது அரிதாகி எல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனை கட்டத்துக்கு நகர்ந்து வருகிறோம். அதே நேரம், சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து நடந்து வரும் சைபர் கிரைம் மோசடியிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறது. அதில், ``UPI பயன்படுத்துபவர்களை குறிவைத்து நடைபெறும் புதிய விதமான மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு இதன் மூலம் எச்சரிக்கிறோம். PhonePe உள்ளிட்ட UPI பயன்படுத்தப்படுவதன் மூலம் மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறுவதாக சமீபத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன.

சைபர் கிரைம்

பாதிக்கப்பட்டவர்கள் PhonePe வழியாக அவர்களுக்கே தெரியாமல், அல்லது அவர்களின் அனுமதியின்றி அவர்களது வங்கி க்கணக்கிலிருந்து எதிர்பாராத முறையில் பணம் மோசடியாக எடுக்கப்படுவதாக புகாரளித்துள்ளனர். இந்த புகார்கள் சம்மந்தமான விசாரணையின்போது, அனைத்து புகார்களிலும் மோசடி செய்யப்பட்ட தொகைகள் அனைத்தும் Amazon Pay-க்கு மாற்றப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் National Cyber Crime Reporting Portal மூலம் சுமார் 7 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இந்த மோசடி செயல்பாட்டின் தீவிர தன்மையை வெளிப்படுத்துகிறது.

இந்த மோசடி எவ்வாறு செய்யபடுகிறது:

PhonePe மூலம் அனுமதி இல்லாத பணப்பரிவர்த்தனைகளைப் பற்றிய விசாரணையில், 'PM Kisan Yojna' என்ற மோசடி செயலி பயன்படுத்தபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி பல்வேறு சேனல்கள், குறிப்பாக WhatsApp மூலம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது பயனாளிகளின் SMS பயன்பாட்டையும் மற்றும் அவர்களின் சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்தகூடியது. மோசடிக்காரர்கள் SMS போக்குவரத்தை தடுத்து, அதன்மூலம் UPI செயலிகளில் மாற்றம் செய்து பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு மோசடியாக சேகரிக்கபட்ட தரவுகளை கொண்டு UPI செயலிகளில் பயன்படுத்தி அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மோசடியாக செய்கின்றனர்.

OTP ஹேக்கிங் மோசடிகள்

இந்த செயலிகள் பெயர். ஆதார் எண். PAN மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகளை இணையத்திலிருந்து எடுத்துகொள்கிறது. இந்த அதிநவீன மோசடி தாக்குதல் பலருக்கு நிதி மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மோசடிக்காரர்கள் அரசாங்கத்தின் நலதிட்டங்களின் மீதான நம்பிக்கை மற்றும் தேவைகளின் மீதான அச்சதை ஏற்படுத்தி உள்ளார்கள். பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க

* உங்கள் வங்கி கணக்கின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணிக்கவும். ஏதாவது அனுமதியற்ற பரிமாற்றங்கள் குறித்து கண்டுபிடித்தால் உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்

* தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதை. தேவையில்லாத செய்திகள் அல்லது மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை தவிர்க்கவும்.

* எந்த சூழ்நிலையிலும் முக்கிய UPI தரவுகளை அல்லது OTP-ஐ பகிர்வதை தவிர்க்கவும்.

சைபர் க்ரைம் மோசடி!

* நிதி பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தவும்.

* எப்போதும் அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் மற்றும் தெரியாத அல்லது உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

புதுக்கோட்டை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்? - நீதிபதி தலைமையில் விசாரணை!

புதுக்கோட்டை, பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக இருந்து கொண்டு போதை ஊசி பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங... மேலும் பார்க்க

16 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது... நீளும் பட்டியலால் அதிர்ச்சி!

வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் குடியேறி, கூலி தொழில் செய்து பிழைத்து வரும் தம்பதியின் 16 வயதான 10 வகுப்பு மகள் கடந்த 10 - ம் தேதி மாயமானார். காவல்துறையில் புகார் அளித்து தேடப்பட்டு வந்... மேலும் பார்க்க

திருச்சி: காவிரி ஆற்றங்கரையில் இரண்டாவது முறையாக கிடைத்த ராக்கெட் லாஞ்சர்! - அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 - ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அது கொரிய போரின் போது அமெரிக்க ... மேலும் பார்க்க

வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் மீதான போக்சோ வழக்கு; 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள ஒலக்காசி ரோடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (61).முன்னாள் ராணுவ வீரரான சேகர், கடந்த 2022ஆம் ஆண்டு 16 வயதான பள்ளி மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ... மேலும் பார்க்க

பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - நீதிமன்றம் அதிரடி!

இன்று சைதாப்பேட்டை 11வது மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் முன்னாள் ஐ.ஜி முருகனுக்கு எதிராக பெண் எஸ்.பி தொடர்ந்த பாலியல் சீண்டல் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராகாத முருகனுக்கு நீதிபதி ... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வகுப்பறையில் மாணவரை கால் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர்; பரவிய வீடியோ, பாய்ந்த நடவடிக்கை

சேலம் மாவட்டம், தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகு... மேலும் பார்க்க