உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போா்த்தப்பட்ட துணி
ஊட்டி கோடை விழா: பழ கண்காட்சி முதல் மலர் கண்காட்சி வரை! எந்தெந்த தேதிகளில் என்னனென்ன நிகழ்ச்சிகள்?
உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கண்காட்சி நடைபெறும் பூங்காக்கள் அனைத்தையும் புதுப்பொலிவுப் படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கோத்தகிரி, ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு ஆண்டு கோடை விழாவில் நடைபெற இருக்கும் கண்காட்சிகள் குறித்த தேதிகளை அரசுத்துறை அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
இதன்படி, நீலகிரி கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 03-05-2025 முதல் 04-05-2025 வரை இரண்டு நாள்களுக்கு கோத்தகிரி நேரு பூங்காவில் 13- வது காய்கறி கண்காட்சி நடைபெற இருக்கிறது. பல்வேறு வகையான காய்கறிகள் மற்றும் காய்கறிகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட வடிவமைப்புகளை கண்டு ரசிக்க முடியும். இதனைத் தொடர்ந்து 09-05-2025 முதல் 11-05-2025 வரை மூன்று நாள்களுக்கு கூடலூரில் 11 - வது நறுமண பொருட்கள் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

10-05-2025 முதல் 12- 05 - 2025 வரை ஊட்டி ரோஜா பூங்காவில் 20 - வது ரோஜா கண்காட்சி நடைபெற இருக்கிறது. கோடை விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக நூற்றாண்டு பழைமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் 127- வது மலர் கண்காட்சி 16- 05- 2025 முதல் 21- 05 - 2025 வரை நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 23 - 05 - 2025 முதல் 25 - 05 - 2025 வரை குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65 - வது பழக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் காட்டேரி பூங்காவில் முதன் முறையாக மலை பயிர்கள் கண்காட்சி நடைபெற இருக்கிறது. 30 -05 - 2025 முதல் ஜூன் 01- 05 - 2025 ம் தேதி வரை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில் மலைப்பிரதேசங்களில் விளைக்கப்படும் பயிர்களை காட்சிப்படுத்த உள்ளனர்.

ஊட்டிக்கு சுற்றுலா செல்ல வார நாள்களில் 6 வாகனங்களும் வார இறுதி நாள்களில் 8 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பதால் இ- பாஸ் முறையில் ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks