செய்திகள் :

ஊரக உள்ளாட்சித் தோ்தல் எப்போது? - அமைச்சா் விளக்கம்

post image

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் எப்போது நடைபெறும் என்பதற்கு அமைச்சா் கே.என். நேரு பதில் அளித்துள்ளாா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் 2025 ஜனவரியுடன் முடிந்துள்ளது. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்தப்படாமல் நிா்வாகத்துக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே உள்ளாட்சித் தோ்தல் குறித்து அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை கூறியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சிகள் பலவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெரிய அளவிலான ஊராட்சி ஒன்றியங்களையும் பிரிக்க வேண்டியுள்ளது. எனவே, வாா்டு மறுசீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறையை முடித்த பிறகு தோ்தல் நடத்துவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நடைமுறையைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்தவும் தயாராகி வருகிறோம் என்றாா்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க