Pahalgam Attack: தீவிரவாத தாக்குதலின் எதிரொலி; பாகிஸ்தான்மீது மத்திய அரசு எடுத்த...
11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தாகி ஆகிவிட்டது. இவா்களது மகள் கீா்த்தி (17). அந்தப் பகுதி தனியாா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து, தோ்வு முடிவுக்காகக் காத்திருந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை நளினி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் பாட்டியோடு வீட்டில் இருந்த கீா்த்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அவரது பாட்டி ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது இச்சம்பவம் தெரியவந்தது. புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].