ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.25% ஆக நிர்ணயம்!
புதுதில்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024-25 நிதியாண்டுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயம். பிப்ரவரி 2024ல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மீதான வட்டி விகிதம் 2023-24 ஆம் ஆண்டு 8.25 சதவிகிதமாக உயர்த்தியது. இது 2022-23ல் 8.15 சதவிகிதமாக இருந்தது.
மார்ச் 2022ல், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை அதன் ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக 8.1 சதவிகிதமாகக் குறைத்தது. 2020-21ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் மீதான 8.10 சதவிகித வட்டி விகிதம் 1977-78 க்குப் பிறகு இது மிகக் குறைவானது. அப்போது ஈபிஎஃப் வட்டி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது.
2020-21 ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் வைப்புத்தொகைக்கு 8.5 சதவிகித வட்டி விகிதத்தை மத்திய அறங்காவலர் குழு ஆனது மார்ச் 2021ல் முடிவு செய்தது. அரசு ஒப்புதலுக்குப் பிறகு, 2024-25ஆம் ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைத்தது.
மார்ச் 2020ல், வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதம் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவிகிதமாகவும், இது 2018-19 க்கு வழங்கப்பட்ட 8.65 சதவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டது. இபிஎஃப்ஓ தனது சந்தாதாரர்களுக்கு 2016-17ஆம் ஆண்டில் 8.65 சதவிகித வட்டியும், 2017-18ஆம் ஆண்டில் 8.55 சதவிகித வட்டியும் வழங்கியுள்ளது.
2015-16 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.8 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் 8.75 சதவிகித வட்டி விகிதத்தை வழங்கியது. இது 2012-13ஆம் ஆண்டிற்கான 8.5 சதவிகிதத்தை விட அதிகமாகும். 2011-12ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.25 சதவிகிதமாக இருந்தது.
இதையும் படிக்க: ஆந்திரத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!