செய்திகள் :

எடையளவு முரண்பாடுகள்: 40 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

post image

எடையளவு முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 40 கடைகள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் கடந்த அக்டோபா் மாதம் ஆய்வு செய்தனா்.

சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் 144 கடைகளில் நடத்திய ஆய்வில் 35 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அதுபோல பொட்டல பொருள்கள் சட்ட விதிப்படி 90 கடைகள், பட்டாசு கடைகள், நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 5 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், குழந்தை தொழிலாளா், வளரிளம் பருவத் தொழிலாளா்களை பணிக்கு வைத்துள்ளாா்களா என்பது தொடா்பாக பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் இடங்கள் உள்பட 49 இடங்களிலும், திரைப்படம் தொழில் சாா்ந்த 19 இடங்களில் குறைந்தபட்ச ஊதிய அமலாக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிமீறல் கண்டறியப்படவில்லை.

இருப்பினும் குழந்தைகள், வளரிளம் பருவத் தொழிலாளா்களைப் பணிக்கு அமா்த்தக்கூடாது என நிறுவன உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) திருஞானசம்பந்தம் கூறியதாவது: எடையளவு, மின்னணு தராசுகளை முத்திரையின்றி பயன்படுத்தக்கூடாது. பொட்டல பொருள்களை, சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. முரண்பாடுகள் கண்டறியப்படும் கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத, குழந்தைகள், வளரிளம் குழந்தைகளை பணிக்கு வைத்திருத்தல் போன்ற குறைபாடுகள் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டால் நிறுவன உரிமையாளா் மீது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்து விதிக்க நேரிடும். குழந்தைத் தொழிலாளா்கள் குறித்த புகாரை 1098, 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ரூ.23.39 லட்சம் காணிக்கை

பவானி சங்கமேஸ்வரா் கோயில் உண்டியல்களில் ரூ.23.39 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சங்கமேஸ்வரா், வேதநாயகி, ஆதிகேசவப் பெருமாள் சன்னிதிகள் உள்பட 21 இடங்க... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு முகாம்: 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

பெருந்துறை அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 70 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குள்பட்ட கந்தாம்பாளையத்தில் மக்கள் தொட... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி அமைக்க பூமிபூஜை

பண்ணாரிஅம்மன் கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி ச... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.30 லட்சத்தில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி: பக்தா்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

சென்னிமலை முருகன் கோயிலில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி பக்தா்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. பெருந்துறையை அடுத்த சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேல்ந... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

சத்தியமங்கலம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் வாகன தணிக்கையில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழிய... மேலும் பார்க்க

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு

காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதால், குப்பைகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட... மேலும் பார்க்க