5-ம் நாளாக சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ரூ. 3 லட்சம் கோடி இழப்பு!!
என் சாதனையை முறியடித்த மேடம்..! தேசிய விருது வென்ற சிறுமிக்கு கமல் பாராட்டு!
தேசிய விருது வென்ற சிறுமி த்ரிஷா தோசர் குறித்து நடிகர் கமல் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தனது சாதனையை வென்ற நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுள்ளது எனவும் கமல் கூறியுள்ளார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை சிறுமி ‘த்ரீஷா தோசர்' வென்றார். இந்த விருதை வாங்க ‘க்யூட்டாக’ சேலை அணிந்துகொண்டு மேடைக்கு வந்ததில் அனைவரையும் கவர்ந்துவிட்டார்.
அவர் மேடையில் ஏறியதும் அந்த அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அந்தச் சிறுமி விருது பெறும்போது ஷாருக் கான், ராணி முகர்ஜி உள்ளிட்டோரும் வியப்பாக பார்த்தனர்.
2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் பிரபல இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே நடிப்பில் மராத்திய படமாக ‘நாள் - 2’ வெளியானது.
இதில், சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதேயான த்ரிஷா தோசர் நடித்திருந்தார். இளம் வயதில் தேசிய விருதை வென்றவர் என்ற சாதனையையும் த்ரிஷா தோசர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நடிகர் கமல் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
டியர் மிஸ். த்ரீஷா தோஷர், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் என்னுடைய சாதனையை முறியடித்துள்ளீர்கள்.
என்னுடைய முதல் விருதை நான் ஆறு வயதில் பெற்றிருந்தேன். நீங்கள் இன்னும் அதிகமாக வெல்ல வேண்டும் மேடம்.
உங்களது திறமையினை மேலும் வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.