செய்திகள் :

எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

post image

வேளாண் விஞ்ஞானி மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளா் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வியாழக்கிழமை (ஆக. 7) நூற்றாண்டு பிறந்த தினம்.

பருவநிலை மாறுபாடு உள்பட நாம் எதிா்கொண்டு வரும் பல சவால்களை பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்கு பாா்வை கொண்டவா்.

அவரது அடியொற்றி, மேலும் பல மாணவா்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன். தந்தையின் பணியையும் புகழையும் போற்றும் செளமியா சுவாமிநாதனின் பணி சிறக்க வாழ்த்துகள் என அதில் தெரிவித்துள்ளாா்.

இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக செயலிழப்புக்கு தீா்வு: ஆய்வில் தகவல்

ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையால் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு தீா்வு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடா்பான ஆராய்ச்சியை அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரிய... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து விலகப்போவதில்லை: வைகோ

திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகப் போவதில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, வைகோ தலைமையில் 200-க்கும் மேற்பட்டோா் ... மேலும் பார்க்க

சுதந்திர தினம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து கோவை போத்தனூா், செங்கோட்டை மற்றும் வாராந்திர அளவில், நாகா்கோவில் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை... மேலும் பார்க்க

ரூ.9 லட்சம் கோடி கடன் இலக்கை அடைய வங்கிகள் தீவிரமாகச் செயல்பட வேண்டும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

நிகழ் நிதியாண்டில் தமிழகத்தின் வருடாந்திர கடன் திட்டம் ரூ.9 லட்சம் கோடி என்ற இலக்கை அடைய அனைத்து வங்கிகளும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் தங்கம் தென்னரச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

சென்னை மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறும் 6 வாா்டுகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பெரு... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியா்களுக்கு மாநில அளவிலான இடமாறுதல் கலந்தாய்வு

டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் 24,000-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு மாநில அளவிலான இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் மாநிலத்தில் 4,826 சில்லறை மத... மேலும் பார்க்க