செய்திகள் :

எம்.பி. சு. வெங்கேடசனை விமர்சித்த பாஜக செயலர்!

post image

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதியை மாற்றியமைக்குமாறு எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்ததை விமர்சித்து தமிழக பாஜக செயலாளர் பதிலளித்துள்ளார்.

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை நாள்களில் பட்டயத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை குற்றஞ்சாட்டியதுடன் தேர்வு தேதிகளை மாற்றியமைக்குமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் தலைவர் ஸ்ரீ ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கோரிக்கை விடுத்து மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

தேர்வு தேதியை மாற்றியமைக்கக் கோரி எம்.பி. வெங்கடேசன் எழுதிய கடிதம்

இந்த நிலையில், பட்டயக் கணக்காளர் தேர்வை மத்திய அரசு நடத்தவில்லை என்றும், தமிழகம்தவிர வேறுசில மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் தமிழக பாஜக செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா பதிலளித்துள்ளார்.

டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``பொங்கல் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களிலும் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உத்தரப் பிரதேசத்தில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் மாஹி, வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என்றும் கொண்டாடப்படுகிறது.

பட்டயக் கணக்காளர் தேர்வு தேதிகளை முடிவு செய்வது மத்திய அரசோ, நிதி அமைச்சகமோ இல்லை. தன்னாட்சி பெற்ற இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) எனும் அமைப்புதான் தேர்வை முடிவு செய்யும். தேர்வு தேதியை முடிவு செய்வதற்கு ஐசிஏஐ-க்கு சில நெறிமுறைகளும் உண்டு. அதனைக் கருத்தில் கொண்டுதான் தேர்வு தேதிகளை முடிவு செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக செயலரின் பதிவைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்கு கருத்தும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு எப்போது? ராகுல் பங்கேற்பாரா?

மகாராஷ்டிரா: 60 ஆண்டுகளுக்குப்பின் எதிர்க்கட்சித் தலைவர் இல்லா பேரவை!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு மிக பலத்த அடியைக் கொடுத்துள்ளது. சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. பெரும்பா... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: புதிய அரசு பதவியேற்பு தேதி அறிவிப்பு!

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு 5... மேலும் பார்க்க

தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப வன்முறையைத் தூண்டும் பாஜக: அகிலேஷ் யாதவ்!

தேர்தல் முறைகேடுகளைத் திசைதிருப்ப உ.பி.யில் ஜாமா மசூதி ஆய்வு விவகாரத்தில் பாஜக கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்ட... மேலும் பார்க்க

காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர்: பாஜக தலைவர்

காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை மகாயுதி தலைவர்க... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து.... ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்ற நபர்!

மும்பை அருகேயுள்ள தானே நகரில் கடந்த 2019 ஆண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது. மும்பை லால்பகதூர் சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 25 அன்று தனது... மேலும் பார்க்க

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 2 டிரோன்கள் கண்டுபிடிப்பு

பஞ்சாபின் அமிர்தசரஸில் சர்வதேச எல்லைக்கு அருகில் இரண்டு ஆளில்லா விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இரண்டு டிரோன்களும் ஒரு ... மேலும் பார்க்க