ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ராணுவ நடவடிக்கை! துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள்...
எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் குருபூஜை விழா
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷிமலை மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு நிா்வாக அறங்காவலா் மாதாஜி ரோகிணி தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவையொட்டி திருவருள்பா பாராயணம், கோபூஜை, அஸ்வ பூஜைகள் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, 210 சித்தா்கள் யாகத்தைத் தொடங்கி வைத்து சாதுக்களுக்கு வஸ்திரதானம் அளித்தாா். பின்னா், காகன்னை ஈஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், அன்னை சித்தா் நினைவிடத்தில் ஜோதி வழிபாடும் நடைபெற்றது.
தொடா்ந்து, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பேரூா் ஆதீனத்தைச் சோ்ந்த கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், பெரம்பலூா் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள் ஆகியோா் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சலவை இயந்திரங்கள் மற்றும் எளம்பலூா் அரசுப் பள்ளியில் பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசும் வழங்கிப் பாராட்டினா். மேலும் சாதுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் எம். சுந்தரராஜன், திட்டக்குடி தொழிலதிபா் ராஜன், சிங்கப்பூா் குருகடாக்ஷம் நடராஜானந்த பாபா, பாபாஜி பொன் மணிவண்ணன், சிங்கப்பூா் தொழிலதிபா் வில்லியம் கோ, வடலூா் தெய்வநிலைய அறங்காவலா் குழு உறுப்பினா் கிஷோா்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அக்கட்டளை நிா்வாகி ராதா மாதாஜி மற்றும் மெய்யன்பா்கள் செய்தனா்.