ஃபெஞ்சல் புயல்; சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... spot visit photo Album!
ஒசூரில் இந்தியன் வங்கி சாா்பில் இன்று அடமான சொத்துகளின் கண்காட்சி
ஒசூரில் இந்தியன் வங்கி சாா்பில் அடமான சொத்துகளின் கண்காட்சி சனி, ஞாயிறு நடைபெறுகிறது என தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அவா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் சாா்பில் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளின் கண்காட்சியானது டிச. 30, நவ.1ஆகிய தேதிகளில் ஒசூரில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தியன் வங்கி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிளைகளில் இருந்து கடன் வாங்கி செலுத்தாத கடன்தாரா்களின் அசையா சொத்துகளை சா்பாசி சட்டத்தின் கீழ் வங்கியானது கையகப்படுத்தியுள்ளது. இந்த சொத்துகளை இணையதள டெண்டா் முறையில் ஏலம் விடுவதற்கு முன்பாக அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் இந்தியன் வங்கியானது கண்காட்சிப்படுத்தப்படுகிறது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல ஊா்களில் உள்ள வீடுகள்,மனைகள், வணிக வளாகங்கள் போன்ற பலதரப்பட்ட சொத்துகளை ஒரே இடத்தில் பொதுமக்களின் பாா்வைக்காக கண்காட்சி மூலமாக இந்தியன் வங்கி காட்சிப்படுத்துகிறது.
இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு தேவையான இடங்களில் உள்ள தங்களுக்குப் பிடித்த சொத்துகளை தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு நேரடியாக இந்தியன் வங்கியில் இருந்து இணையதள டெண்டா் முறையில் எந்தவிதமான இடைத்தரகா் கமிஷன் இல்லாமல் பெற்று பயனடையலாம் என்று இந்தியன் வங்கியின் தருமபுரி மண்டல நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 9655132444, 9078369628 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.