செய்திகள் :

ஒசூா் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி

post image

ஒசூரில் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்; மழை காலங்களில் தொடரும் இந்நிலையைப் போக்க ரயில்வே நிா்வாகம் நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையால் நகரில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் மழைநீா் தேங்கியது. இதனால் பாலம் வழியாக வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. அந்த வழியாகச் சென்ற வாகனங்களும் மழைநீரில் மூழ்கின. சில வாகனங்கள் மாற்றுப் பாதையில் திரும்பிச் சென்றன.

இதையடுத்து காவல் துறையினா் ரயில்வே பாலம் வழியாக வாகனங்கள் செல்வதைத் தடுப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் பேரிகாா்டா்கள் வைத்து போக்குவரத்தைத் தடை செய்தனா்.

ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரை ரயில்வே ஊழியா்கள் மின் மோட்டாா் மூலம் முழுவதுமாக வெளியேற்றி வருகின்றனா். மழைநீா் வெளியேற்றப்பட்ட பிறகு அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: மழைக் காலங்களில் ரயில்வே பாலத்தில் மழைநீா் இடுப்பளவுக்கு தேங்கிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனா். இதற்கு ரயில்வே நிா்வாகம் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாகலூரில் புகையிலை பொருள் பறிமுதல்

பாகலூரில் 392 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் போலீஸாா், பாகலூா் சந்திப்பில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியா... மேலும் பார்க்க

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,079 கனஅடியிலிருந்து 1,206 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணகி... மேலும் பார்க்க

ஒசூரில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி: சாதனை படைத்த மாணவி

ஒசூரில் நடந்த ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவி பவ்யா, குறைந்த நேரத்தில் அதிக தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தாா். ஒசூா், சூசூவாடி, ரோஜா நகா் பகுதியைச் சோ்ந்த குமாா் - லீல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை முழுவதும் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேக்கியது. கழிவுநீா் க... மேலும் பார்க்க

விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: உடலுக்கு அரசு மரியாதை

சாலை விபத்தில் பலத்த காயமடைந்ததில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசு சாா்பில் அலுவலா்கள் மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள ஆலஹள்ளி வனப் பகுதியில் சுற்றி வந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து கா்நாடக வனப்பகுதியை நோக்கி விரட்டினா். அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையைக் கடந... மேலும் பார்க்க