கத்தாா்: முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு - வெளியுறவுத் துறை அமைச்சரிடம் ராஜேஸ்கும...
ஒடிசா கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு
ஒடிசா கிராமத்தில் இருந்து 18.5 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் கேந்தரபாரா மாவட்டத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய பூங்கா அருகே உள்ள ராஜேந்திரநாராயண்பூர் கிராமத்தில் 18.5 அடி நீளமுள்ள இந்திய ராக் வகை மலைப்பாம்பு வெள்ளிக்கிழமை வழிதவறி வந்துள்ளது.
பாம்பைக் கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, வனத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!
மலைப்பாம்புக்கு சில காயங்கள் ஏற்பட்டதால், தற்போது கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முழுமையாக குணமடைந்ததும் மலைப் பாம்பு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
மலைப்பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை என்று வன அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.