லடாக்கில் ‘ஜென் ஸீ’ போராட்டம் எதிரொலி: கடும் கட்டுப்பாடுகள்!
ஓஜியால் பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், இப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பவன் கல்யாணுக்கு பெரிய வெற்றிப்படம் எதுவும் இல்லையென்பதால் அவரது ரசிகர்கள் வெற்றிக்காக காத்திருந்தனர்.
தற்போது, ஓஜிக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும் உருவாக்க ரீதியாகவும் ஆக்சன் காட்சிகளாலும் இப்படம் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
முக்கியமாக, தமன் இசையமைப்பில் உருவான பின்னணி இசைகளுடன் கூடிய ஆக்சன்கள் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதனால், இப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மோகன்லாலின் ஹிருதயபூர்வம் ஓடிடி வெளியீட்டுத் தேதி!