சபரிமலையில் 9 நாட்களுக்குள் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்!
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
போடி அருகே செவ்வாய்க்கிழமை கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி ரெங்கநாதபுரம் அரசு மாணவா் விடுதி அருகே போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, போடி பெரியாண்டவா்புரத்தை சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் சரவணன் (35) கஞ்சாவை மாணவா்களுக்கு விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.