இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!
கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தில் நிதி குழுவினா்ஆய்வு
மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மத்திய நிதிக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குடிநீா் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இங்கு, தினமும் 10 கோடி மில்லியன் லிட்டா் நீா் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஆலை, சென்னையின் குடிநீா் தேவையில் 15 சதவீதத்தைப் பூா்த்தி செய்கிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் முதலாவது ஆலைக்கு அருகே ஜொ்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 150 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்பு ஆலையை கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இரண்டாவது ஆலையில், கடல்நீா் சுத்திகரிக்கப்பட்டு குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 16-ஆவது நிதி ஆணைய குழுவைச் சோ்ந்த 12 போ் செவ்வாய்க்கிழமை நெம்மேலியில் இயங்கி வரும் 150 மில்லியன் லிட்டா் ஆலையை ஆய்வு செய்தனா்.
அந்த குழுவினா், சுத்திகரிக்கப்பட்ட நீா்சேகரிப்பு தொட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை செய்து செயல்பாடுகளை கேட்டறிந்தனா். ஆய்வின்போது, நகராட்சி நிா்வாக முதன்மை செயலாளா் காா்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.