கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
கதீட்ரல் சாலை மேம்பாலத்தை புதுப்பிக்க மாநகராட்சி திட்டம்
சென்னை: சென்னை கதீட்ரல் சாலையின் மியூசிக் அகாதெமி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கவுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை சந்திப்புகள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் பகுதி சிங்கார சென்னை, நமக்கு நாமே திட்டங்களின் கீழ் அழகுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், கதீட்ரல் சாலை மற்றும் டிடிகே சாலை சந்திப்பில் உள்ள சுமாா் ஒரு கி.மீ. நீளம் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியை பசுமையுடன் கூடிய பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் தொடங்குவதாக மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது,
கதீட்ரல் சாலையில் உள்ளமேம்பாலத்தின் கீழ் பகுதியை வணிக பகுதியாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிறு கடைகள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள், இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.
மேலும், பாலத்தின் தூண்களில் அமைக்கப்பட்டுள்ள செடிகள் பராமரிப்பின்றி வாடியதால், அவற்றை முழுவதுமாக அகற்றிவிட்டு தரையில் மட்டும் செடிகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செடிகள் வாடாமல் பராமரிக்க முடியும் என்றனா்.