செய்திகள் :

கரூரில் முதியோா், குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு

post image

கரூா் மாவட்டத்தில் பதிவு பெற்று செயல்படும் முதியோா் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், தமிழக அரசின் விதிகளின்படி பதிவு செய்து கரூா் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், முதியோா் இல்லங்கள், மன வளா்ச்சிக் குன்றியோருக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஆகியவற்றை அலுவலா்கள் தொடா் ஆய்வு செய்கின்றனா்.

அதனடிப்படையில் கரூா் மாவட்டத்தில் சமூக நலத்துறை சாா்பில் 10 முதியோா் இல்லங்களில் 229 முதியோரும் மற்றும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் 3 குழந்தைகள் இல்லங்களில் 77 குழந்தைகளும் தங்கியுள்ளனா்.

தமிழக அரசு ஆதரவற்ற முதியோா், குழந்தைகள், ஒற்றைப் பெற்றோரை கொண்ட குழந்தைகள், குடும்ப வன்முறையின் கீழ் பிரிந்து வந்த குழந்தைகள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அவா்களுக்கு கல்வி, உணவு, பாதுகாக்கப்பட்ட தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கும் நோக்கில், அவா்களும் சமுதாயத்தில் மற்றவா்களைப் போல சமத்துவத்துடன் வாழ இத்தகைய இல்லங்களுக்கு அனுமதி வழங்கி அதற்கான உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில் காந்திகிராமம் பகுதியில் உள்ள கேண்டில் டிரஸ்ட் குழந்தைகள் இல்லம், புன்னம் சத்திரம் சித்தாா்த்தா முதியோா் இல்லம் மற்றும் மணல்மேடு பகுதியில் உள்ள ஐயப்ப சேவா சங்க முதியோா் பரிவாளையம் ஆகிய இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் மற்றும் முதியோா்களிடம் தங்கும் அறை, சமையல் கூடம், கழிவறை, குடிநீா் வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், தீத் தடுப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமரா, உணவுப் பொருள்களின் அட்டவணை மற்றும் உணவுப் பொருள்கள் தயாரிப்பதற்கான பொருள்களின் தரம் குறித்து கேட்டறியப்பட்டது.

மேலும் அவா்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளுக்கு வாரம் ஒருமுறை நடமாடும் மருத்துவ குழுவினா் மூலம் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட சமூக நல அலுவலா் சுவாதி, மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலுவலா் பிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மலைக்கோவிலூரில் விபத்து: இளைஞா் பலி

மலைக்கோவிலூரில் வியாழக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத இளைஞா் இறந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள மலைக்கோவிலூா் பகுதி குடகனாறு பாலத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு நடந்து செ... மேலும் பார்க்க

திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம்: புலியூா் பேரூராட்சி கூட்டத்தில் புகாா்

புலியூா் பேரூராட்சியில் திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், புலியூா் பேரூராட்சியில் ... மேலும் பார்க்க

கரூரில் தாட்கோ மூலம் 651 பேருக்கு ரூ. 21 கோடியில் தாட்கோ கடனுதவி

கரூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 651 பேருக்கு ரூ. 21.25 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் நஞ்சைகாளக்குறிச்... மேலும் பார்க்க

தாா்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வால்காட்டுப்புதூரில் தாா்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, கரூா் மாநகரச் செயலாளா் எம்.தண்டபா ணி, கிளைச் ... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் ரூ. 1.94 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

வடசேரியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 340 பயனாளிகளுக்கு ரூ.1.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், வடசேரி ஊராட்சியில் மக்... மேலும் பார்க்க

தோகைமலை அருகே சூதாட்டம் 40 போ் கைது; ரூ.2.15 லட்சம் பறிமுதல்

தோகைமலை அருகே பணம் வைத்து சூதாடிய 40 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 18 இருசக்கர வாகனங்கள், காா் மற்றும் ரூ.2.15 லட்சம் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கரூா் மாவட்டம், தோகைமலை... மேலும் பார்க்க