"நீதிபதி சனாதனத்தை அவமதிப்பதை ஏற்க முடியாது" - தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீ...
கரூர் மரணங்கள்: "நாங்களே மன கஷ்டத்தில் இருக்கிறோம்" - எஸ்.ஏ. சந்திரசேகர்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அம்மா அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக இன்று (அக்.8) காலமானார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்சவேணியின் மகன் எல்.கே. சுதீஷின் இல்லத்தில் அம்சவேணியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் ஈரோட்டில் பூத் முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் அவர்களது தாயார் மறைவைத் தொடர்ந்து சென்னை புறப்பட்டனர்.

இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் நாளை (08.10.2025) மதியம் 1 மணி அளவில் தொடங்கி வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பிரேமலதா, அவரின் அம்மாவை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
நேற்று வரைக்குமே அவர் நன்றாகத்தான் இருந்திருக்கிறார். அதனால்தான் பிரேமலதா அவர்களும் மீட்டிங் சென்றிருக்கிறார்.
என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து கரூர் சம்பவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், "ஏற்கனவே நாங்கள் மனக்கஷ்டத்தில் இருக்கிறோம். நாங்கள் இறப்பு வீட்டிற்கு வந்திருக்கிறோம். எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்று தெரியாதா?" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.