செய்திகள் :

அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் முடக்கம்: வலுக்கும் கண்டனம்; ஆசிரியர் சமஸ் சொல்வது என்ன?

post image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் தொகுதி தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற அதே காலகட்டத்தில், அ.தி.மு.க சில பல அணிகளாகப் பிரிந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் (2017) நடந்தது. இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன், அ.ம.மு.க வேட்பாளர் டிடிவி தினகரன், அ.தி.மு.க வேட்பாளர் இ.மதுசூதனன், ஜெ. தீபா உள்ளிட்ட மொத்தம் 59 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

அதனால் தேர்தல் களம் தீயாக இருந்தது.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஒ.பன்னீர் செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் தொகுதி தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற, அதே காலகட்டத்தில், அ.தி.மு.க சில பல அணிகளாகப் பிரிந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல் (2017) நடந்தது. இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன், அ.மு.மு.க வேட்பாளர் டிடிவி தினகரன், அ.தி.மு.க வேட்பாளர் இ.மதுசூதனன், ஜெ. தீபா உள்ளிட்ட மொத்தம் 59 வேட்பாளர்கள் களமிறங்கினர். அதனால் தேர்தல் களம் தீயாக இருந்தது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற சூழல் உருவானது. ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்கள் ஆதரவு பெற்ற அ.தி.மு.க அணி எது என்பதை உறுதிப்படுத்தும் இடைத்தேர்தலாக அ.தி.மு.க-வின் பல அணிகள் கருதின. எனவே, அ.தி.மு.க-வின் தலைமைக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்தச் சூழலில்தான் புதிய தலைமுறை செய்திச் சேனல் ஏப்ரல் 7, 2017 அன்று காலையில் ஆர்.கே.நகர் தொகுதி கள நிலவரம் தொடர்பாக 'மக்கள் நாடிக்கணிப்பு' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட தரவுகள் அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக இல்லை எனக் கூறப்பட்டது.

அதனால், நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்திலேயே திடீரென அரசுக் கேபிள்களிலிருந்து புதிய தலைமுறை ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது.

சுமார் 15 மாவட்டங்களில் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு இது ஊடகச் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் எனச் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். அதன்பிறகுதான் புதிய தலைமுறை சேனல் மீண்டும் அரசு கேபிளுக்கு கொண்டுவரப்பட்டது.

டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன் - எடப்பாடி பழனிசாமி

தற்போது அதுபோன்றதொரு சூழல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ``அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தித் தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்குச் சென்றடைகின்றன.

தகுதி இருந்தும் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு இந்தச் சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.

புதியதலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன், நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசு கேபிள் டிவி-யில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.கடந்த சில நாட்களாக முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையைத் தொடர்ந்து வருகிறது விஞ்ஞான தகிடுதத்தங்களுக்குப் பெயர் போன விடியா திமுக அரசு.

பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது.

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாகக் கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

புதிய தலைமுறை செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் சமஸ்
சமஸ்

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை செய்தி சேனலின் செய்தி ஆசிரியர் சமஸிடம் பேசினோம். அவர், ``எங்கள் புதிய தலைமுறை செய்தி சேனல் சில பகுதிகளில் தெரியவில்லை எனப் புகார் வந்தது. அதைத் தொடர்ந்து சோதித்ததில் சில பகுதிகளில் சேனல் தெரியவில்லை என்பது உண்மை.

அதே நேரம் எங்கள் சேனல் முழுமையாக முடக்கப்படவில்லை. அரசு தரப்பில் பேசியபோது, சேனலை முடக்கவில்லை என்றே தெரிவித்தனர். தொடர்ந்து அரசிடம் பேசிவருகிறோம்” என்றார்.

கமல்: "அவரின் பேச்சு உங்களைப்போன்ற என்டர்டெய்னர்களுக்குப் புரியாது" - பாஜக அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பாளரும் மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் க... மேலும் பார்க்க

"இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டுமா?" - இஸ்ரேலியர்களின் மனநிலை குறித்த ஆய்வு சொல்வது என்ன?

இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் - காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதே... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இ... மேலும் பார்க்க

புதிய தலைமுறை: "கருத்துச் சுதந்திரம் என வாய்கிழியப் பேசிவிட்டு ஊடகங்கள் மீது ஆதிக்கம்" - சீமான்

தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை' சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள்... மேலும் பார்க்க