செய்திகள் :

சேலம்: சாலையைக் கடக்க முயன்ற தலைமைக் காவலர்; லாரி மோதி பலியான சோகம்

post image

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (40) என்பவர் சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு அன்புராஜ் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள உறவினர்களைப் பார்க்க சென்றுள்ளார். பின்னர் இரவு சேலம் மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பெட்ரோல் தீர்ந்துவிட்டது.

Accident
Accident

இதனால் அன்புராஜ் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கிக்கொண்டு சாலையைக் கடந்துள்ளார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த லாரி ஒன்று அன்புராஜ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அன்புராஜ் அதே இடத்தில் துடிதுடித்து இறந்துவிட்டார். இந்த விபத்தை அறிந்த காரிப்பட்டி காவல் நிலைய போலீசார் உடனே சம்பவ இடம் சென்று அன்புராஜின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமை காவலர் அன்புராஜ் மீது மோதிய லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதியதில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

``உங்க பணம், 1 ரூபாய் கூட குறையாது'' - விபத்தில் சிக்கியவர் குடும்பத்தை நெகிழ வைத்த டி.எஸ்.பி!

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்க... மேலும் பார்க்க

``சாப்பிட வந்தபோது என் தாயை இழந்துவிட்டேன்'' - ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனை தீவிபத்து; 8 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் 11 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தீவிபத்து ஏற்... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து - பதறிய மக்கள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீப... மேலும் பார்க்க

விழுப்புரம்: நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்… மூன்று இளைஞர்கள் உயிரிழந்த பின்னணி என்ன?

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் என்ற 25 வயது இளைஞர், பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆயுத பூஜைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையில் கேரளாவுக்குச் செல்ல முடிவெடுத்த அஜீஸ், சென்ன... மேலும் பார்க்க

Ennore: சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து; வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பலி

சென்னை அருகே இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அனல் மின் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

கரூர்: ``நிபந்தனையை மீறி செயல்பட்டார் விஜய்'' - காவல்துறையின் FIR சொல்வது என்ன?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரைதவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்தி... மேலும் பார்க்க