செய்திகள் :

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

post image

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கவும், பெண் வாக்காளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஆளும் பா.ஜ.க கூட்டணி பெண்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைத்து இருக்கிறது. இதனால் பெண்களின் வாக்கை வைத்து வெற்றி பெற்றுவிட முடியும் என்று பா.ஜ.க கூட்டணி நம்பிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகள் தங்களது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றன. பா.ஜ.க தலைமை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பி இருக்கிறது.

தேஜஸ்வி
தேஜஸ்வி

அவர் ஏற்கனவே ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோரைச் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்துப் பேசியிருக்கிறார். இதில் ஜிதன் ராம் மஞ்சி தங்களுக்கு 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் 7 முதல் 10 தொகுதிக்குள் கொடுக்க பா.ஜ.க முயன்று வருகிறது.

இதே போன்று உபேந்திர குஷ்வாஹாவின் கட்சி தங்களுக்கு 15 தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் அக்கட்சிக்கு 7 அல்லது 8 தொகுதிகள் வரை கொடுக்க பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 30 முதல் 35 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது. ஆனால் பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் 20 முதல் 22 தொகுதிகள் வரை கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனால் பா.ஜ.க கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரஜ் கட்சியுடன் கூட்டணி சேருவது குறித்து சிராக் பஸ்வான் ஆலோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊருக்கெல்லாம் அரசியல் ஆலோசனைகளை வழங்கிய பிரசாந்த் கிஷோர் முதல் முறையாக தனது சொந்த மாநிலமான பீகாரில் தேர்தல் களம் காண்கிறார்.

பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 200 தொகுதியைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளை மட்டும் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பிடிவாதம் காட்டும் தேஜஸ்வி

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 130 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்துப் பேசி வருகிறார்.

இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு 55 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி சதவீதம் குறைவாக இருந்ததைச் சுட்டிக்காட்டி தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொடுக்க தேஜஸ்வி யாதவ் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இடதுசாரிக்கட்சிகளும் இம்முறை 45 தொகுதிகளைக் கேட்கின்றன. ஆனால் 35 தொகுதிகள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதற்காக விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவை தேஜஸ்வி யாதவ் சந்தித்துப் பேச இருக்கிறார்.

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

கூட்டணியில் சேர இருக்கும் மற்றொரு கட்சியான விகாஷீல் இன்சான் கட்சி 50 முதல் 60 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால் அந்தக் கட்சிக்கு வெறும் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

இதனால் அக்கட்சி தலைவர் முகேஷ் சகானி அமைதி காத்து வருகிறார். ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிக் கூட்டணியும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. வரும் 9ஆம் தேதி பிரசாந்த் கிஷோர் தனது கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறார். இதில் பிரசாந்த் கிஷோர் பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீகார் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.

கமல்: "அவரின் பேச்சு உங்களைப்போன்ற என்டர்டெய்னர்களுக்குப் புரியாது" - பாஜக அண்ணாமலைக்கு மநீம கண்டனம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துப் பேசிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பாளரும் மாநிலச் செயலாளருமான முரளி அப்பாஸ் க... மேலும் பார்க்க

"இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டுமா?" - இஸ்ரேலியர்களின் மனநிலை குறித்த ஆய்வு சொல்வது என்ன?

இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் - காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதே... மேலும் பார்க்க

அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் முடக்கம்: வலுக்கும் கண்டனம்; ஆசிரியர் சமஸ் சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்... மேலும் பார்க்க

புதிய தலைமுறை: "கருத்துச் சுதந்திரம் என வாய்கிழியப் பேசிவிட்டு ஊடகங்கள் மீது ஆதிக்கம்" - சீமான்

தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை' சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள்... மேலும் பார்க்க