செய்திகள் :

புதிய தலைமுறை: "கருத்துச் சுதந்திரம் என வாய்கிழியப் பேசிவிட்டு ஊடகங்கள் மீது ஆதிக்கம்" - சீமான்

post image

தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை' சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், `ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயல்' எனத் தி.மு.க அரசுக்கெதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.

ஊடக மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றன.

இருப்பினும், அரசுத் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

புதிய தலைமுறை
புதிய தலைமுறை

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பதிவில் சீமான், "தமிழக அரசின் கேபிள் சேவையிலிருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியை நீக்கியிருக்கும் தி.மு.க அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதற்காக ஒரு தொலைக்காட்சியையே இருட்டடிப்பு செய்யும் இப்போக்கு கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி மிரட்டல்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

சனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் வாய்கிழியப் பேசிவிட்டு, ஊடகங்கள் மீது ஆதிக்கம் செய்வதும், அடக்குமுறைகளைச் செலுத்துவதும் வெட்கக்கேடானது.

ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறையைக் கைவிட்டு உடனடியாக தமிழ்நாடு முழுவதும் புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரியும்படி அரசு கேபிளில் மீண்டும் இணைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று திமுக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இ... மேலும் பார்க்க

அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் முடக்கம்: வலுக்கும் கண்டனம்; ஆசிரியர் சமஸ் சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்... மேலும் பார்க்க

"சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அக்., 18 வரை நீட்டிப்பு; அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை" - சித்தராமையா

காங்கிரஸ் கட்சியானது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலின்போதும் சரி, தேர்தலுக்குப் பிறகும் சரி தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "நாங்களே மன கஷ்டத்தில் இருக்கிறோம்" - எஸ்.ஏ. சந்திரசேகர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அம்மா அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக இன்று (அக்.8) காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அம்சவேணியின் மகன் எல்.கே. சுதீஷின் இல்லத்தில் அம்சவேணியின் உடல... மேலும் பார்க்க