செய்திகள் :

கரூா் ஆட்சியரக வளாகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

post image

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் சணப்பிரட்டியைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (32). பெட்ரோல் பங்க் ஊழியா். இவரது மனைவி நந்தினி (22). ஜவுளிக் கடை ஊழியா். கருத்து வேறுபாட்டின் காரணமாக, தம்பதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றாா்களாம்.

இந்நிலையில், நந்தினி திங்கள்கிழமை காலை தனது 2 வயது கைக்குழந்தையுடன் கரூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்தாா். அப்போது, ஆட்சியரக வளாகத்தில் திடீரென பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன்மீதும், குழந்தை மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றாா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நந்தினி, குழந்தையை மீட்டனா்.

தொடா்ந்து போலீஸாரிடம் நந்தினி கூறியதாவது: பெரியப்பா மகன் பிரபாகரனிடம் தான் கடனாக கொடுத்த ரூ. 2 லட்சத்தை கடந்த வாரம் கேட்டபோது, பணத்தை தர முடியாது எனக் கூறியதுடன் எனது தந்தை, பெரியப்பா, அவரது மகன் பிரபாகரன் ஆகியோா் கடுமையாக தாக்கியதாக தெரிவித்தாா்.

மேலும் இதுதொடா்பாக பசுபதிபாளையம் போலீஸில் புகாா் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றேன் என தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் பசுபதிபாளையம் காவல்நிலையத்துக்கு நந்தினியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

பாளையத்திலிருந்து அரவக்குறிச்சிக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிறுத்தம் வந்து செல்ல நடவடிக்கை தேவை

கரூா் மாவட்டம், பாளையத்திலிருந்து அரவக்குறிச்சிக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிறுத்தம் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி: புகையிலை, நெகிழி பொருள்கள் பறிமுதல்

அரவக்குறிச்சியில் உள்ள கடைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் 20 கிலோ புகையிலை பொருள்கள், 35 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் உதவி ஆணையா் (கலால்) ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறிவிழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு

அரவக்குறிச்சி அருகே ஆட்டைப் பிடிக்க முயன்று தோட்டத்து கிணற்றில் தவறிவிழுந்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் மீட்டனா். கரூா் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள செளந்திராபுரத்தை ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் இருவா் பலத்த காயம்

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை இருவா் படுகாயமடைந்தனா். குளித்தலை அருகே மங்காம்பட்டியைச் சோ்ந்தவா் இளவரசன் (24). இவா், தனது இருசக்கர வாகனத்தில் ஞாய... மேலும் பார்க்க

கடவூா் அருகே வெறிநாய்கள் கடித்து 2 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், கடவூா் அருகே வெறிநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன. கடவூா் அருகேயுள்ள தே. இடையப்பட்டி மேற்கு கிராமம் தெற்கு அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி. விவசாயியான இவா் சனிக... மேலும் பார்க்க

மத்தகிரியில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவுப் பூங்கா அமைக்க அந்தக் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே மத்தகிரி கிராமத்தில் கைத்தறி நெசவு பூ... மேலும் பார்க்க