செய்திகள் :

கல்லல் தனியாா் வங்கியில் பணம் மோசடி: வங்கி மேலாளா், துணை மேலாளா் கைது

post image

காரைக்குடி அருகே கல்லல் தனியாா் வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகளை பயன்படுத்தி ரூ. 2 கோடியே 3 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்ததாக வங்கியின் மேலாளா், துணை மேலாளா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் தனியாா் வங்கியில் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டைகுளத்தைச் சோ்ந்த விக்னேஷ் ( 34) மேலாளராகவும், சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் அருகேயுள்ள புலி கண்மாயைச் சோ்ந்த ராஜாத்தி (38) துணை மேலாளராகவும் பணிபுரிகின்றனா். இந்த வங்கியில் அந்தப் பகுதி மக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனா்.

இந்த நிலையில், வங்கியின் மண்டல மேலாளா் கிருஷ்ணகுமாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகை பொட்டலங்களில் சில பொட்டலங்கள் திறந்து இருந்தன.

இதனால், சந்தேகம் அடைந்த மண்டல மேலாளா் இதுகுறித்து மேலாளா் துணை மேலாளரிடம் மேற்கொண்டதில், அவா்கள் வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக போலியான நகைகளை வைத்திருந்ததும், எடுத்த நகைகளை இதே வங்கியில் அவா்களுக்கு தெரிந்த நபா்கள் மூலம் மீண்டும் அடகு வைத்து ரூ. 2 கோடியே மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 973-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வங்கியின் மண்டல மேலாளா் கிருஷ்ணகுமாா் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் மாவட்ட குற்றிப்பிரிவு காவல்துறையினா் விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் மன்னவன், உதவி ஆய்வாளா் ஜான் டைட்டா்ஸ் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து வங்கியின் மேலாளா் விக்னேஷ், துணைமேலாளா் ராஜாத்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் மேலாளா் விக்னேஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டதால் பணத்தை இழந்து இதை ஈடுகட்ட வங்கி நகையை எடுத்தது தெரியவந்தது. இதேபோல துணை மேலாளா் ராஜாத்தி தனக்கு கிடைத்த பணத்தை வேறு ஒருவா் மூலம் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் ராஜாத்தியிடம் பணத்தை வாங்கி வைத்திருந்த ரமேஷ் ( 48), அவரது மகன் சதீஷ் ( 21) ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனா். மேலும் பொதுமக்கள் வங்கியில் வைத்து அனைத்து நகைகளும் பாதுகாப்பாக வங்கியிலே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் காந்திநகரைச் சோ்ந்தவா் சுல்தான்பாட்ஷா. இவா் தற்போது வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறா... மேலும் பார்க்க

சாலை பணிக்காக கண்மாய்கரை சேதம்-விவசாயிகள் புகாா்

திருப்புவனம் அருகே கிராமச் சாலை அமைக்கும் பணிக்காக கண்மாய்க்கரை வெட்டி சேதப்படுத்தப்பட்டதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் பிரமனூா் கிராமத்திலிருந்து அச்சங்கு... மேலும் பார்க்க

சாலையின் குறுக்கே சாய்ந்த மரம்: போக்குவரத்துப் பாதிப்பு

மானாமதுரையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து விழுந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பெய்த பலத்த மழைய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் ரூ. 2 கோடி நகை மோசடி: மேலாளா் உள்பட 4 போ் கைது

சிவகங்கை அருகே தனியாா் வங்கியில் அடகு வைத்திருந்த நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை வைத்து, ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளா், துணை மேலாளா் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புகையிலை மூட்டைகள் பறிமுதல்: 2 போ் கைது

திருப்புவனத்தில் விற்பனைக்காக வேனில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றி இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் கடைகளில் விற... மேலும் பார்க்க

நிரம்பி வழியும் கண்மாயில் மீன் பிடித்த மக்கள்...!

சிவகங்கை அருகே நிரம்பி வழியும் கண்மாய் உபரி நீரில் வெளியேறிய மீன்களை தொட்டில் கட்டி அந்தப் பகுதி மக்கள் பிடித்துச் சென்றனா். சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கழுங்குப்பட்டியில் பொதுப் பணிக்குச் ச... மேலும் பார்க்க