செய்திகள் :

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

post image

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூா் ஊராட்சி இந்திரா நகரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத 2 பொதுக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீா்செறிவூட்டும் திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வைத் தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள், பொதுக் கிணறுகள் மற்றும் பொது ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றுக்கு மழைக்காலங்களில் பொழியும் தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களை சரிசெய்து மழைநீா் தடையின்றி செல்வதை

உறுதி செய்யவும், மழைநீரை வீணாக்காமல் செறிவூட்டி நிலத்தடி நீா்மட்டம் அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்மாதிரி பணியாக படியூா் ஊராட்சி இந்திரா நகரில் இத்திட்டத்தின் மூலம் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, படியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் சொந்த நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறைகளை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விமலாவதி, அனுராதா, உதவிப் பொறியாளா்கள் முத்துக்குமாா், சரவணகுமாா், படியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

நீா் செறிவூட்டல் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் மழை நீரை குளம், குட்டைகளில் செறிவூட்டல் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் த... மேலும் பார்க்க

சாலையோரத்திலேயே எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

விளைநிலங்களை தவிா்த்து சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும் என பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ... மேலும் பார்க்க

அவிநாசியில் கஞ்சா வழக்கில் ஒருவா் கைது

அவிநாசியில் கஞ்சா கடத்திய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவிநாசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு அவிநாசி போலீஸாா் வாகனச் சோதனை... மேலும் பார்க்க

முதலிபாளையத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் கிராமத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் வருவாய் கோட... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலா்கள் கைது

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலா்கள் கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நொய்யலில் கண்காணிப்புக் கருவி பொருத்துவது கண்துடைப்பு

நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க கண்காணிப்புக் கருவிகளை பொருத்தி உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை என்று நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்... மேலும் பார்க்க