அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பா்பனியில் வன்முறை
கார்த்திகை தீபம்: தாம்பரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்!
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் யார்? கோலி, மெஸ்ஸிக்கு இடமில்லையா?
அதன்படி, தாம்பரத்தில் இருந்து டிச. 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்றடையும்.
அதேபோல், மறுவழித்தடத்தில் திருவண்ணாமலையில் இருந்து டிச. 13, 14, 15 ஆகிய தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.