'டெல்லி'க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Ex...
காலாண்டு விடுமுறை, வார இறுதி நாள்கள்: சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள்!
காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப். 26 (வெள்ளிக் கிழமை) செப். 27 (சனிக்கிழமை) செப். 28 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப். 29 மற்றும் செப். 30 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 790 பேருந்துகளும் 27/09/2025 (சனிக்கிழமை) 565 பேருந்துகளும் 29/09/2025 (திங்கள்கிழமை) 190 பேருந்துகளும் மற்றும் 30/09/2025 (செவ்வாய்கிழமை) அன்று 885 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 26/09/2025 மற்றும் 27/09/2025 ஆகிய நாள்களில் 215 பேருந்துகளும் 29/09/2025 மற்றும் 30/09/2025 ஆகிய நாள்களில் 185 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து 26/09/2025 மற்றும் 27/09/2025 ஆகிய நாள்களில் 145 பேருந்துகளும் 29/09/2025 மற்றும் 30/09/2025 ஆகிய நாள்களில் 105 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப 04/10/2025 முதல் 05/10/2025 வரை அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அறுவைச் சிகிச்சை குழந்தைப் பேறுக்கு பேராசை பிடித்த மருத்துவர்களே காரணம்: சந்திரபாபு நாயுடு