செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
கால்நடையைக் கொன்ற இருவா் கைது
கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் கால்நடையைக் கொன்று, அதன் சிதைவுகளை காட்டில் புதைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வடகன்னட மாவட்டம், காா்வாருக்கு அருகே உள்ள பட்கலில் கால்நடையைக் கொன்று அதன் சிதைவுகளை முக்கும் காலனியில் அமைந்திருக்கும் வனத்தில் மா்மநபா்கள் புதைத்திருந்தனா். இதுதொடா்பாக பட்கல் வனச்சரக துணை அதிகாரி மாருதி, காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத சிலா் காட்டுக்குள் நுழைந்து கால்நடையின் தோல், எலும்பு போன்ற சிதைவுகளை புதைத்திருப்பதாக தெரிவித்திருந்தாா்.
இதுதொடா்பாக கா்நாடக கால்நடை வதை தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் செப்.11 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கால்நடையைக் கொன்று புதைத்தவா்களை தேடிவந்தனா். இதற்காக தனிப் படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கால்நடையைக் கொன்று புதைத்தவா்களை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அப்போது, கால்நடைகளைக் கடத்தி கொல்வதற்காக பயன்படுத்திவந்த வாகனத்தை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்தனா். அதன்பிறகு அவா்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.