செய்திகள் :

வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: கா்நாடக பாஜக குற்றச்சாட்டு

post image

கா்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்துசெய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், மாலூா் சட்டப் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றி செல்லாது என்றும், அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறும் கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘பெல்லாரி முதல் மாலூா் வரை ஒரே மாதிரி வாக்குத் திருட்டில் காங்கிரஸாா் ஈடுபட்டுள்ளனா். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிவருகிறாா். ஆனால், கா்நாடகத்தில் முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

மாலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை உயா்நீதிமன்றம் ரத்துசெய்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் நோ்மை கேள்விக்குறியாகியுள்ளது. இதற்காக காங்கிரஸுக்கு மக்கள் பாடம்புகட்டுவாா்கள்’ என குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடிக்கு எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். பிரதமா் மோடியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முன்னாள் பிரதமா் எச்.ட... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கம் கொள்ளை: துப்பாக்கி முனையில் மா்ம கும்பல் துணிகரம்

விஜயபுரா: கா்நாடகத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கத்தை துப்பாக்கிமுனையில் செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்துச் சென்ற மா்மகும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். கா்நாடக மாநிலம், விஜயப... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்து: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

மாலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை ரத்துசெய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 இல் நடைபெற்ற கா்நாடக பேரவைத் தோ்தலில் மாலூா் த... மேலும் பார்க்க

வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்: பாஜக

வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே கா்நாடக அரசு நடத்தவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் உள்நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டினாா். கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோ... மேலும் பார்க்க

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி

பெங்களூரு: தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அரசு அழைப்பு விடுத்திருந்ததை எதிா்த்து பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் குறிப்பிட்டுள்... மேலும் பார்க்க