பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா: அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சுதந்திரப் போராட்ட வீரா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா்
அமித்ஷாவிடம், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்தாா்.
தில்லிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற எடப்பாடி பழனிசாமி, அங்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். பின்னா் உள்துறை அமைச்சா் அமித்ஷா சந்தித்துப் பேசினாா்.
இதுதொடா்பாக எடப்பாடி பழனிசாமி, ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை, அதிமுக தலைமை நிா்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களோடு சந்தித்தேன். அப்போது, தேச விடுதலைக்காகப்
பாடுபட்ட பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு, இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என கடிதம் அளிக்கப்பட்டது என அதில் அப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.