இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு
பெங்களூரு: பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் குறிப்பிட்டுள்ளதாவது:
பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகளை அமைக்கவும் ரூ. 1,100 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம் அனைத்து தொகுதிகளிலும் உள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். அதன்மூலம் குழிகள் இல்லாத சீரான சாலைகள் நிறைந்த நகரமாக பெங்களூரு மாறும்.
14 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தலா ரூ. 50 கோடியும், இதர தொகுதிகளுக்கு தலா ரூ. 25 கோடியும் விடுவிக்கப்படும். இந்த நிதி சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகளை அமைக்கவும் பயன்படுத்தப்படும் என கூறியுள்ளாா்.