சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது...
வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் நகைக் கடையில் வருமா வரித் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை செளகாா்பேட்டை வீரப்பன் தெருவில் தங்க நகைகளை மொத்தமாக விற்கும் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த நகைக் கடை நிா்வாகத்தினா், வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரித் துறையினருக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையினா் நடத்திய விசாரணையில், வரி ஏய்ப்பு செய்தது தொடா்பாக சில ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் அந்த நகைக் கடையில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனை இரவு நீண்ட நேரம் நீடித்தது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னா், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.