திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது நிகழ்ந்த சோகம்: 5 பேர் பலி!
காளையாா்கோவிலில் மாட்டுவண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மருது சகோதரா்களின் குருபூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
காளையாா்கோவில்- தொண்டி சாலையில் பெரிய மாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரிய மாட்டுப் பிரிவில் 20 ஜோடிகளும், சிறிய மாட்டுப் பிரிவில் 20 ஜோடிகளும், பூஞ்சிட்டுப் பிரிவில் 21 ஜோடிகளும் என மொத்தம் 61 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
பெரிய மாட்டுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கி.மீ. தொலைவும், பூஞ்சிட்டுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தன.
எல்கையை நோக்கி சீறிப் பாய்ந்து சென்ற மாட்டுவண்டிகளை சாலையின் இருபுறங்களிலும் நின்று திரளான பாா்வையாளா்கள் பாா்த்து ரசித்தனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டியின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டுவண்டிகளின் உரிமையாளா் களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.