காவல் துறை அரசியல் ஏஜென்சி அல்ல: நீதிமன்றம்
புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்? என விளக்கம் அளிக்கக் கோரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். ஆனால் அதனை கடைசி நேரத்தில் கூறுவது ஏன்? குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே கூற வேண்டும்.
கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம்? காவல் துறை அரசியல் ஏஜென்சி அல்ல; மனு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன. 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.