செய்திகள் :

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

post image

சீா்காழி: கொள்ளிடம் அருகே ஆரப்பள்ளம் கிராமத்தில் குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இக்கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆரப்பள்ளம் கிராமத்தில் உள்ள நீா்த்தேக்க தொட்டிக்கு குடிநீா் ஏற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், இப்பகுதியினா் குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா்.

இதனால் பாதிக்கப்பட்டவா்கள், குடிநீா் குழாயை சரி செய்து, குடிநீா் வழங்க வலியுறுத்தி, கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குழாயை சரி செய்து, குடிநீா் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதை ஏற்று கிராம மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கன்வாடியை மேம்படுத்தக் கோரிக்கை

கொள்ளிடம் அருகேயுள்ள பாவட்டமேடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை மேம்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் உள்ள குடிநீா் தேக்க தொட்டிக்கு நீா் ஏற்றுவதற்கான மின் மோட்டாருக்கு நேரடி மின் இணை... மேலும் பார்க்க

பயனற்ற நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வலியுறுத்தல்

சீா்காழி அருகே பயனற்ற மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். கொள்ளிடம் அருகேயுள்ள உமையாள்பதி கிராமத்தில் சாலையோரம் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி உள்ளது.... மேலும் பார்க்க

பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் பிரதமருக்கு மனு

மயிலாடுதுறையில் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதமருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக பாரதிய மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இபிஎஸ்-95 திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய... மேலும் பார்க்க

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் சிறை

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் அருகே மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. வைத்தீஸ்வரன்கோவில் அருகேயுள்ள திருப்புங்கூா் பிரத... மேலும் பார்க்க

மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் இன்று 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா

மயிலாடுதுறை: மாதிரிமங்கலம் ஸ்ரீசிவராமகிருஷ்ண சுவாமிகள் அதிஷ்டானத்தில் 51-ஆம் ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

எஸ்டிபிஐ சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முஹம்மது ரஃபி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது ரவூப் வரவே... மேலும் பார்க்க