செய்திகள் :

குட் பேட் அக்லி கால அளவு இவ்வளவுதானா?

post image

குட் பேட் அக்லி திரைப்படத்தின் கால அளவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது.

படத்தின் டீசர் மற்றும் ஓஜி சம்பவம், காட் பிளஸ் யூ ஆகிய பாடல்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் ஏப். 10 ஆம் தேதி வெளியாகும் படத்திற்கு இப்போதே கொண்டாடட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.

நீண்ட காலம் கழித்து ரசிகர்களுக்கான படத்தில் அஜித் நடித்திருப்பதால் இப்படத்தை முதல்நாள் முதல் காட்சியே பார்க்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

உறுதியாக, முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் பெறும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் சென்சார் செய்யப்படாத கால அளவு 2.18 மணி நேரம்தானாம். சென்சார் செய்யப்பட்டால் 2.15 மணி நேரமாக மாறவே வாய்ப்பு அதிகம்.

அஜித் இறுதியாக நடித்த துணிவு (2. 26), விடாமுயற்சி (2.30) மணி நேரங்கள் கொண்ட படமாக இருந்தன. ஆனால், குட் பேட் அக்லி குறைவான கால அளவையே கொண்டிருப்பதால் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், 3 மணி நேர படங்கள் சலிப்பை ஏற்படுத்தி விடுவதால் படக்குழு எடுத்த முடிவு சரியானது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: வீர தீர சூரன் - இதுவரை வசூல் எவ்வளவு?

வேட்டுவம் கதாநாயகி இவரா?

வேட்டுவம் திரைப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் நடிகர் ஆர்யாவை நாயகனாக வைத்து சர்பட்டா - 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார... மேலும் பார்க்க

பஞ்சாயத்து 4-ஆவது சீசன் ரிலீஸ் தேதி!

பஞ்சாயத்து இணையத்தொடரின் 4ஆவது சீசனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான பஞ்சாயத்து எனும் இணையத் தொடர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. டிவிஎஃப் தயாரித்த இந்தத் தொடரினை தீபக் ... மேலும் பார்க்க

நிறைவடைகிறது நீ நான் காதல் தொடர்!

நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.ஸ்டார் மா தொலைக்காட்சியின் பிரபல தொடரான 'நுவ்வு நேனு பிரேமா' என்ற தொடரின் மறு உருவாக்கமாக 'நீ நான் காதல்' தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.விஜய... மேலும் பார்க்க

முட்டையைக்கூட வேக வைக்கத் தெரியாது: கரீனா கபூர்

நடிகை கரீனா கபூர் தனக்கு சமைக்கவே தெரியாது என்றும் முட்டையைக் கூட வேக வைக்கத் தெரியாது எனக் கூறியுள்ளார். ஹிந்தியில் 2000ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் கரீனா கபூர். பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள... மேலும் பார்க்க

ஜாலியன் வாலாபாக் படுகொலை வழக்கு படத்தின் டிரைலர்!

அக்‌ஷய் குமார், மாதவன் நடிப்பில் உருவான கேசரி - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அனுராக் சிங் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்த கேசரி திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப்படமானது. பிரிட... மேலும் பார்க்க

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை!

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் சின்ன திரை நடிகையுமான சங்கீதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஆனந்த ராகம் தொடரில் ப... மேலும் பார்க்க