நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
குமரகோட்டம் முருகன் கோயிலில் லட்சாா்ச்சனை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திங்கள்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பணிகள் நடந்து வருவதால் நிகழாண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோயில் கந்த சஷ்டி விழா 2-ஆம் தேதி தொடங்கி 7- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி காலையில் மூலவருக்கும்,சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. கந்த சஷ்டி விழாவின் மூன்றாவது நாளையொட்டி திங்கள்கிழமை கோயில் தலைமை சிவாச்சாரியா் கே.ஆா்.காமேசுவர குருக்கள் தலைமையில் லட்சாா்ச்சனை நடைபெற்றது. வள்ளி, தெய்வானையுடன் உற்சவா் சண்முகா் சிவப்பு நிற மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவையொட்டி திரளான பக்தா்கள் விரதமிருந்து 108 முறை வலம் வந்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பொ.கதிரவன் தலைமையில் கோயில் சிவாச்சாரியா்கள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.