செய்திகள் :

`கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் இல்லை...' - கே.பாலகிருஷ்ணன்

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளரிடம் பேசும்போது, "மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது எப்படி நடந்தது என்று பலரும் பல கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கே.பாலகிருஷ்ணன்

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பாஜக பேசி வந்தது. ஆனால் அதே பாஜக தான், மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போல் இலவசங்களை அறிவித்தது. மற்றவர்களுக்கு ஒரு நியாயம் பாஜக-விற்கு ஒரு நியாயம், தேர்தல் வெற்றிக்காக பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யும்.

வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தில் மோடி அரசாங்கம் மகாராஷ்டிரா வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மோசமான சட்டங்களை இயற்ற முற்படும். அரசியல் சாசனத்திற்கு சமாதி கட்டும் ஏற்பாடாகத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இருக்கும். இந்தத் திட்டத்தை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். குடியுரிமை சட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற மோசமான திட்டங்களை அமல்படுத்தும் நடவடிக்கைகளை பாஜக முன்னெடுக்கிறது.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் விலையை குறைக்க மோடி அரசு மறுக்கிறது.

கடந்த ஒரு வருடமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். சொந்த நாட்டிலுள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இவர்களே கலவரத்தை தூண்டிவிட்டு அதை முடித்து வைக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள்.

கே.பாலகிருஷ்ணன்

இலவசங்களை கொடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கு போட்டார்கள், மகாராஷ்டிராவில் மாதம் மாதம் மகளிருக்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என்று தெரிவிக்கிறார்கள். பாஜக-விற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு கொள்கையா?

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளன்று மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறார்கள். வேண்டுமென்றே பொங்கல் தினத்தில் தேர்வை அறிவித்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோத அணுகுமுறையாக நாங்கள் பார்க்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம். அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது, கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

மதுரை அரிட்டாப்பட்டியில் கனிம வளங்களை கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கும் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.

Adani : `அதானி விவகாரம்; மோடியும் ஸ்டாலினும் மௌனம் காப்பது ஏன்?' - சீமான் கேள்வி!

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது அமெரி... மேலும் பார்க்க

Canada: `எங்கள் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதை விட நம்பகத்தன்மையற்றவர்கள்...' - ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: `எதிர்க்கட்சிகள் இதை செய்தாக வேண்டும்...!' - திருமாவளவன் சொல்வதென்ன?

நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மகா விகாஷ் கூட்டணி ஆட்சி அமைக்கும் அதே நேரம், எதிர்க்கட்சி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைக... மேலும் பார்க்க

Modi: `காங்கிரஸால் இனி தனித்து ஆட்சியமைக்க முடியாது... அது ஒட்டுண்ணிக் கட்சி' - பிரதமர் மோடி காட்டம்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, ஏக்நாத் ஷ... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' - கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் இருந்ததோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதிலி... மேலும் பார்க்க