கேகேஆர் அணியில் விளையாடியது குறித்து தமிழக வீரர் பாபா இந்திரஜித் பேட்டி!
பாபா இந்திரஜித் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர். முதல்தர கிரிக்கெட்டில் 81 போட்டிகளில் 5,545 ரன்கள் குவித்துள்ளார். அதில் 16 சதங்கள், 29 அரைசதங்கள் அடங்கும். சராசரி 52.31 என்பது குறிப்பிடத்தக்கது.
25 டி20 போட்டிகளில் இந்திரஜித் 451 ரன்களுடன் சராசி 21.47ஆக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 115ஆகவும் இருக்கிறது. இதில் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக விளையாடியபோது மிகப்பெரிய கற்றம் அனுபவம் கிடைத்ததாகக் கூறியுள்ளார். இந்திரஜித் 3 போட்டிகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்தாண்டு டிஎன்பில் கோப்பையை வென்ற அணியில் இருந்தார். இந்த ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகவில்லை.
சோனி ஸ்போர்ட்ஸ் தமிழி கிரிக்கெட் பாட்காஸ்ட் - நிகழ்ச்சியில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் பேசியதாவது:
2022இல் நான் கேகேஆர் அணியில் இருந்தேன். அந்த முறை லீக் போட்டிகளிலே கேகேஆர் அணி வெளியேறியது. அது மிகவும் உணர்ச்சிகரமான அனுபவம். மெக்குல்லம், பாட் கம்மின்ஸ் உடன் ஓய்வறையை பகிர்ந்துகொண்டது எனக்கு மிகப்பெரிய கற்றல் அனுபவம். டேவிட் ஹஸி, பிரெண்டன் மெக்குல்லம் கேகேஆர்-லிருந்து சிஎஸ்கேவுக்கு சேர்ந்தார்கள். எனக்கு அவர்களுடன் நல்ல பழக்கம் இருந்தது. மைக்கல் ஹசி மிகச்சிறந்த மனிதர்.
நான் விளையாட ஆரம்பிக்கும்போது எஸ். பத்ரிந்தாத், எல். பாலாஜி, தினேஷ் கார்த்திக் என பல மூத்த வீரர்கள் இருந்தார்கள்.
அப்போதுதான் ஒரு போட்டியை அணுகும் விதம் மாறியது. புதுவிதமான கிரிக்கெட் பிரபலமாக தொடங்கிய நேரமது. குறிப்பாக மனநிலையில் மாற்றம். முன்பெல்லாம் ஆட்டமிழந்தால் 10 முறை ஆடுகளத்தை சுற்று என பயிற்சியாளர்கள் சொல்வதுபோல் இப்போது கிடையாது.
அஸ்வின் ஒரு லெஜெண்ட். எப்போதும் சவாலை விரும்பக்கூடியவர். அது சாதாரணமில்லை. அவர் மிகவும் தைரியமான வீரர் என்றார்.